×
Saravana Stores

கேரள மாநிலம் கல்பாத்தி தேர்த்திருவிழாவில் ரதசங்கமம் கோலாகலம்


பாலக்காடு: பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற கல்பாத்தி தேர்த்திருவிழாவில் ரதசங்கமம் கோலாகலமாக நேற்று நடைபெற்றது. கேரள மாநிலம், பாலக்காடு கல்பாத்தி தேர்த்திருவிழா கடந்த 10 நாட்களாக அக்ரஹாரங்களில் அமைந்துள்ள 6 கோயில்களில் பல்வேறு விசேஷ பூஜைகளுடன் விழா நடைபெற்று வந்தது. கல்பாத்தி தேர்த்திருவிழாவின் நிறைவு நாளான நேற்று மாலை குண்டம்பலம் முன் 6 கோயில்களின் ரதங்கள் சங்கமிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கல்பாத்தி விசாலாட்சி விஸ்வநாதர், விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணியர், மந்தகரை மகா கணபதி, லட்சுமி நாராயணப்பெருமாள், சத்தப்புரம் பிரசன்ன மகா கணபதி ஆகிய கோயில்களின் தேர்கள் கடந்த 3 நாட்கள் அக்ரஹார வீதிகளில் மக்கள் மத்தியில் அசைந்தாடிய வண்ணம் வீதியுலா வந்தது.

இந்நிலையில் நேற்று மாலை குண்டம்பலம் தேர்முட்டி வீதியில் 6 கோயில்களின் தேர்கள் ஒன்றாக சங்கமிக்கும் ரதசங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வந்தனர். மேலும் இந்நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு பக்தி பரவசம் அடைந்தனர். நேற்று ஆறு கோயில்களிலும் விஷேச பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்டவரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

The post கேரள மாநிலம் கல்பாத்தி தேர்த்திருவிழாவில் ரதசங்கமம் கோலாகலம் appeared first on Dinakaran.

Tags : Rathasangam Kolakalam ,Kalpathi ,Therthiruvizha, Kerala State ,Palakkad ,Rathasangamam ,Kalpathi festival ,Kerala State ,Kalpathi Therthiru Vizah ,Agraharams ,Rathasangamam Kolagalam ,Kerala ,
× RELATED சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக...