×

சந்து கடையில் மது விற்றவர் கைது

ஊத்தங்கரை, நவ.12: ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை காவல் நிலைய எஸ்எஸ்ஐ சின்னசாமி மற்றும் போலீசார், மிட்டப்பள்ளி பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, 24 மணி நேரமும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்தவரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த மதுவேல்(56) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post சந்து கடையில் மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,SSI Chinnasamy ,Singarapet police station ,Mittapally ,
× RELATED வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சசிகலா நிவாரண உதவி