×

கருப்பன் குமாரசாமி என விமர்சனம்: கர்நாடக அமைச்சரை நீக்க வலியுறுத்தல்

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவும் அமைச்சருமான ஜமீர் அகமது கான் சென்னபட்டனா இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது , ‘ காங்கிரஸ் வேட்பாளர் சி.பி.யோகேஸ்வர் இதற்கு முன்பு வேறு வழியின்றி பாஜவில் சேர்ந்தார். காங்கிரசில் இதற்கு முன்பு இருந்த போது சில கருத்து வேறுபாட்டால் அவர் சுயேச்சையாக போட்டியிட்டார். ஆனால் அவர் மஜதவில் இணைய தயாராக இருந்ததில்லை. பாஜவை விட கருப்பன் குமாரசாமி மிகவும் மோசமானவன். அதனால் மீண்டும் காங்கிரசுக்கே அவர் வந்துவிட்டார் என்று கூறினார்.

இதற்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்தள்ள மஜத, ‘ ஜமீர் உங்கள் பதவியும் பேராசையும் தேவகவுடா குடும்பத்தை வாங்க தூண்டுகிறது. ஆனால் உங்களை அரசியலில் உருவாக்கிய தேவகவுடா என்றுமே விழுந்துவிடமாட்டார்’ என கூறியுள்ளனர். மேலும் இது போன்ற குறுகிய புத்தியுள்ளவர்களை காங்கிரஸ் அரசு அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இதே போல் ஒன்றிய அமைச்சர் கிரண்ரிஜுஜூ தனது எக்ஸ் தள பதிவில், ‘குமாரசாமியை கருப்பன் என்று விமர்சித்த ஜமீர் அகமது கானுக்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

The post கருப்பன் குமாரசாமி என விமர்சனம்: கர்நாடக அமைச்சரை நீக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Karuppan Kumaraswamy ,Karnataka ,BENGALURU ,Karnataka Congress ,MLA ,Minister ,Jameer Ahmed Khan ,Congress ,Chennapatna ,C.P. Yogeswar ,BJP ,
× RELATED ராபின் உத்தப்பா மீதான கைது...