- துணை முதலமைச்சர்
- உதயநிதி ஸ்தல்
- ஒலிம்பிக்
- அகாடமி
- மதுரை
- சென்னை
- ராணிப்பேட்டை
- உதயநிதிஸ்தல்
- ஒலிம்பிக் அகாடமி
சென்னை: சென்னையில் இருந்து காணொளி காடசி மூலம் மதுரையில் ஒலிம்பிக் அகாடமி கட்டடத்திற்கு துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார். சென்னையில் 553 மாணவர்களுக்கு சாம்பியன்ஸ் கிட் வழங்கினார். ராணிப்பேட்டையில் விளையாட்டு மைய வளாகம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.
பின்பு அவர் பேசியதாவது தமிழ்நாட்டில் இருந்து தலைசிறந்த விளையாட்டு வீரர், விராங்கனைகளை உருவாக்குவோம். சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் இதுவரை 600-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு திராவிட மாடல் அரசு உரிய முக்கியத்துவம் அளித்து வருகிறது.
திராவிட மாடல் அரசு அமையந்த பிறகு 3 ஆண்டுகளில் 120 வீரர்களுக்கு ரூ.108 கோடி அளவில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ.6 கோடியில் ஒலிம்பிக் அகாடமிக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை விளையாட்டு துறையின் தலைநகரமாக மாற்றுவோம் என்று துணை முதல்வர் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியுடன் நேருக்கு நேர் விவாதிக்கத் தயார். விவாதத்திற்கு என்னை அழைத்தால் நிச்சயமாக செல்வேன். கருணாநிதி பெயரை தவிர வேறு யார் பெயரை வைக்க வேண்டும். விமர்சனங்கள் வருவதால் கருணாநிதி பெயரை வைக்காமல் இருக்க முடியாது. திட்டங்களுக்கு கருணாநிதி பெயரை வைப்பதை இபிஎஸ் விமர்சித்திருந்த நிலையில் உதயநிதி பேட்டி அளித்துள்ளார்.
The post மதுரையில் ஒலிம்பிக் அகாடமி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் appeared first on Dinakaran.