×

இலங்கையில் தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கவும்: திருமாவளவன்

சென்னை: இலங்கையில் தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கக்கோரி ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு திருமாவளவன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இலங்கையில் சபகரமுகவா பல்கலை. இந்தியில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இந்திக்கு வழங்குவது போல் தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு தங்கப் பதக்கமும், பரிசும் வழங்குக என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

The post இலங்கையில் தமிழில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கவும்: திருமாவளவன் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,CHENNAI ,Thirumavalavan ,president ,Liberation Tigers of India ,Union Minister ,Jaishankar ,
× RELATED ஜல்லிக்கட்டும் ஹை-டெக்காக மாறுது...