×
Saravana Stores

2024ம் ஆண்டில் மட்டும் பஞ்சாப்புக்கு அத்துமீறிய 200 பாக். ஆளில்லா விமானங்கள்: எல்லை பாதுகாப்பு படை அறிக்கை

புதுடெல்லி: இந்தியாவின் மேற்கு பகுதியில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பாகிஸ்தானில் சர்வதேச எல்லை 2,290 கிலோமீட்டர் தூரத்துக்கு உள்ளது. இதை எல்லை பாதுகாப்பு படையினர் கண்காணித்து, காத்து வருகின்றனர். இதில் பஞ்சாப் பாகிஸ்தானுடன் 553 கிலோமீட்டர் தூரத்தை பகிர்ந்து கொள்கிறது. பஞ்சாப்பிலுள்ள இந்திய – பாகிஸ்தான் எல்லை வழியே பாகிஸ்தானிலிருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் போதைப்பொருள், ஆயுதங்களை கடத்துவதும், இதை எல்லை பாதுகாப்பு படை தடுத்து, சுட்டு வீழ்த்தும் சம்பவங்கள் தொடர் கதையாக நீடிக்கின்றன.

இந்நிலையில் நடப்பாண்டில் பஞ்சாப் எல்லையில் மீட்கப்பட்ட ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருப்பதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இதுகுறித்து எல்லை பாதுகாப்பு படை வௌியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2023ம் ஆண்டில் மட்டும் இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் 107 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன அல்லது மீட்கப்பட்டன. இது தற்போது இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியா – பாகிஸ்தான் இடையே பஞ்சாப் எல்லையில் இருந்து நான்கு ஆளில்லா விமானங்கள் மீட்கப்பட்டன. இதையும் சேர்த்து 2024ம் ஆண்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானங்களின் எண்ணிக்கை 200ஆக உயர்ந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளது.

The post 2024ம் ஆண்டில் மட்டும் பஞ்சாப்புக்கு அத்துமீறிய 200 பாக். ஆளில்லா விமானங்கள்: எல்லை பாதுகாப்பு படை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Punjab ,Pak ,Border Security Force ,New Delhi ,Pakistan ,India ,Jammu and ,Kashmir ,Rajasthan ,Gujarat ,Dinakaran ,
× RELATED சட்டீஸ்கரில் 5 நக்சல்கள் பலி