×
Saravana Stores

சாக்லேட் பட்டாசுகள்!

நன்றி குங்குமம் தோழி

‘‘கிறிஸ்மா கிறிஸ்ட் சைல்ட் கிஃப்ட் கான்செஃப்ட் விளையாட்டுகளை கிறிஸ்துமஸ் பண்டிகையில் மட்டும்தான் விளையாட வேண்டுமா? என்கிற கேள்வியோடு, எல்லா பண்டிகையிலும் நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் தேடிச் சென்று கிஃப்டிங் செய்கிற குணம் எல்லோருக்குள்ளும் வரவேண்டும் என முடிவு செய்தே, தீபாவளி பண்டிகையிலும் நாம் இதைச் செய்வோம் என நானும் எனது இணையருமாக முடிவெடுத்தோம்.இதற்கென நாங்கள் தேர்வு செய்த களம் சோஷியல் மீடியா. வலைத்தள நட்புகளை இணைத்து ரகசியமாய் கிஃப்ட் செய்யத் தொடங்கிய விஷயம் இன்று பட்டாசு வடிவ சாக்லேட் பாக்ஸில் வந்து நிற்கிறது…’’ புன்னகைக்கின்றனர் ஜோதிபாசு-ஆனந்த ரேஷ்மி காதல் தம்பதியினர்.

‘‘நாங்கள் இருவருமே சூழலியலை காக்க நினைப்பவர்கள். பட்டாசு வெடித்து ஊரெல்லாம் புகைமண்டலமாகவும், குப்பைகளாகவும் ஆக்குவதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்பதால் தீபாவளிக்கு பட்டாசுகளை நாங்கள் எப்போதும் வெடிப்பதில்லை. இருந்தாலும் தீபாவளி என்றால் பட்டாசும், இனிப்பும் தானே நம் நினைவில் நிற்கும். கடந்த நான்கு வருடமாக நண்பர்களை தேடிச்சென்று சந்தித்து வாழ்த்து சொல்லி தீபாவளி பரிசுகளை வழங்கி வந்த நிலையில், இந்த ஆண்டு புதிய முயற்சியாக பட்டாசு மாதிரியான சாக்லேட் மோல்ட் தயாரித்து, ஸ்வீட் பாக்ஸ் மீது ஹேப்பி தீபாவளியென பிரின்ட் செய்து, அதற்குள் பூச்சட்டி, தரைச் சக்கரம், ராக்கெட், லெக்ஷ்மி வெடி, சரவெடி, ஆட்டோ பாம் வடிவில் சாக்லேட்டுகளை தயாரித்து கலர்ஃபுல்லான பட்டாசு வண்ணக் காகித பேப்பர்களில் சாக்லேட்டுகளை ரேப் செய்து, ஸ்வீட் பாக்ஸ் வடிவ அட்டைப்பெட்டியில் நிரப்பி நண்பர்களைத் தேடிச் சென்று கிஃப்ட் செய்து வருகிறோம்.

எங்களது இந்த முயற்சியை நண்பர்கள் மூலம் அறிந்த ஒருசில கார்ப்பரேட் நிறுவனங்கள் ரொம்பவே ஆர்வமாகி, எங்களைத் தேடிக் கண்டுபிடித்து, சாக்லேட் பட்டாசுக்கான பல்க்
ஆர்டர்களையும் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்’’ எனப் புன்னகைக்கின்றனர் இருவரும்.‘‘இந்த முயற்சி வழியாக, நீண்ட நாள் சந்திக்காத எங்கள் நண்பர்களை சந்திக்கிறோம் என்பதைத் தாண்டி, அவர்களுக்கு எங்களின் தீபாவளித் திருநாள் வாழ்த்துகளை நேரில் சொல்வதோடு, இனிப்பையும் அன்பையும் அவர்களோடு பரிமாறி… எங்கள் நினைவுகளை பட்டாசு வடிவ சாக்லேட்டில் பதிவு செய்துவிட்டு வருகிறோம்’’ என்கின்றனர்.‘‘ச்சும்மா… இது ஒரு ஜாலி என்பதைத் தாண்டி… நட்புக்கான மெனக்கெடல்’’ என்றவாறு நமக்கும் தீபாவளி வாழ்த்தை சொல்லி விடைபெற்றனர் ஜோடியாக இந்தக் காதல் பறவைகள்.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்

The post சாக்லேட் பட்டாசுகள்! appeared first on Dinakaran.

Tags : Saffron ,Christmas ,Dinakaran ,
× RELATED இது புன்னகைக்கும் விஷயம் இல்லைங்க…