- ஜெயந்தினாத்
- சோரபத்மன்
- திருச்செந்தூர்
- கந்தசஷ்டி விழா
- சூரசமஹாரா
- கந்தா சஷ்டி காவாச விழா
- திருச்செந்தூர் முருகன் கோயில்
- யகசாலா
- ஆரோகர கோஷம்
திருச்செந்தூர் : கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று திருச்செந்தூரில் சூரசம்ஹார நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் கடந்த 2ம் தேதி கந்த சஷ்டி கவச விழா யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அன்று முதல் பக்தர்கள் விரதம் இருக்கத் தொடங்கினர். தினசரி காலை மாலை ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானைக்கு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டு முக்கிய நிகழ்வான சிகர நிகழ்ச்சி எனப்படும் சூரசம்ஹாரம் இன்று மாலை தொடங்கியது.சூரசம்ஹார விழாவில் ஜெயந்திநாதர் அவதாரம் எடுக்கும் முருகப்பெருமான், கடற்கரையில் எழுந்தருளினார்.
அப்போது. கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தர்களின் கோஷம் விண்ணைப் பிளந்தன. மக்கள் அவையில் வந்த ஜெயந்திநாதர் முதலில் யானை முகம் கொண்ட தாரகாசுரனை வதம் செய்தார். இரண்டாவதாகச் சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை வதம் செய்தார். எனினும் தொடர்ந்து தலையை ஆட்டியபடி தன்முகத்தோடு போரிட வந்த சூரபத்பனை எழுந்தருளி வதம் செய்தார். பின்னர் கடைசியாக கடலுக்கு நடுவே மாமரமாக மாறிய சூரபத்மனை வேலாயுதத்தால் முருகப்பெருமான் இரண்டாக பிளந்தார். அதன் ஒரு பகுதி சேவலாகவும், இன்னொன்று மயிலாகவும் மாறியது.இறுதியில், மயிலை தனது வாகனமாகவும், சேவலை தனது கொடியாகவும் வைத்துக் கொண்டார் முருகப்பெருமான்.
The post அசுரனாகிய சூரபத்மனை வதம் செய்த ஜெயந்திநாதர்.. திருச்செந்தூரில் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்!! appeared first on Dinakaran.