×

எலான் மஸ்கிற்கு அடித்த ஜாக்பாட்.. ட்ரம்ப் வெற்றியால் டெஸ்லா பங்குகள் விலை 14.75% உயர்வு : சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடி அதிகரிப்பு!!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளரான எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன பங்குகள் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். இதனால் உலகம் முழுவதில் பெறும் மாற்றங்கள் நிகழ தொடங்கியுள்ளன. அந்த வகையில், அவரது ஆதரவை பெற்ற உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க்-கிற்கும் பெரிய லாபம் ஏற்பட்டுள்ளது. அவரது நிறுவனமான டெஸ்டாவின் பங்குகள் சுமார் 14.75% வரை அதிகரித்துள்ளன.அமெரிக்க பங்குச்சந்தையில் டெஸ்லா பங்கு ஒன்று 288.53 டாலராக உயர்ந்தது.

டெஸ்லா பங்கு விலை அதிகரித்ததை அடுத்து எலான் மஸ்க் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. அதன்படி, எலான் மஸ்கின் மொத்த சொத்து மதிப்பு 24.46 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆட்சியில் கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான கொள்கைகள் செயல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பில் பங்குவிலை இவ்வாறு அதிகரித்துள்ளது. இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு தீவிரமாக பாடுபட்டவர் எலான் மஸ்க்.

எலான் மஸ்க் ட்ரம்பிற்கு ஆதரவாக மேடைகளில் பேசினார். கூட்டங்களில் கலந்துகொண்டார். டிவிட்டரையே ஒரு பிரசார மேடையாக மாற்றியதுடன் எதிர்க்கட்சியினரைக் கலாய்த்து மீம்ஸ்களை பகிர்ந்தார்.இந்த தேர்தலில் ட்ரம்புக்கிற்காக எலான் மஸ்க் சுமார் ரூ.1,000 கோடியை செலவிட்டார். டிரம்பின் வெற்றியால் மஸ்க் மட்டும் ஆதாயம் அடைந்ததில்லை. அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், உலகின் இரண்டாவது பணக்காரர், அவரது சொத்து மதிப்பும் அதிகரித்துள்ளது. நேற்று அமெரிக்க பங்குச் சந்தைகள் கிடுகிடுவென உயர்வை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

The post எலான் மஸ்கிற்கு அடித்த ஜாக்பாட்.. ட்ரம்ப் வெற்றியால் டெஸ்லா பங்குகள் விலை 14.75% உயர்வு : சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.2.19 லட்சம் கோடி அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Elon Musk ,Tesla ,Trump ,Washington ,Donald Trump ,U.S. President ,Republican Party ,US ,presidential election ,Dinakaran ,
× RELATED டிரம்ப் நிர்வாகத்தில் எலன் மஸ்க்,...