×

போதைக்கு எதிராக எஸ்பி விழிப்புணர்வு

 

பெரம்பலூர், நவ.6: பெரம்பலூர் மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் பெரம்ப லூர் மாவட்ட காவல் துறையினர் போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் போதைக்கு எதிராக விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் உள்ள வர வேற்பு அறையில் வைக்கப் பட்டுள்ள, \”போதையில்லா பெரம்பலூர் மாவட்டத்தை உருவாக்குவோம்\” என்ற விழிப்புணர்வு பதாகையில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஆதர்ஷ் பசேரா நின்று போட்டோ எடுத்து – போதை ‘எனக்குவேண்டாம்’ நமக் கும் வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி னார். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையம் மற்றும் போக்கு வரத்து காவல் நிலையம், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் வைக்கப்பட்டுள்ள விழிப் புணர்வு பதாகைகளில் போலீசார் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் நின்று விழிப் புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

The post போதைக்கு எதிராக எஸ்பி விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : SP ,Perambalur ,Perambalur District SP ,Uttaravin ,Perambalur District Police ,Perambalur district ,Dinakaran ,
× RELATED இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்:...