×

சாட்டையடி வாங்கிய அதிமுக மாஜி அமைச்சர்


ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவையொட்டி நேற்று பூவோடு எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பூசாரி கையில் பூச்சட்டியை ஏந்தி கோயிலை வலம் வந்தார். அப்போது பக்தர்கள் தாங்கள் வைத்திருந்த நாணயங்களை பூச்சட்டியில் போட்டு வழிபட்டனர். முக்கிய நிகழ்வான சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் வரிசையாக நின்று அருள்வந்து ஆடிய கோயில் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ராசிபுரம் முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக முன்னாள் அமைச்சருமான சரோஜா மற்றும் அவரது கணவர் லோகரஞ்சன் ஆகியோரும் பக்தர்களுடன் வரிசையாக வந்து பூசாரியிடம் சாட்டையடி வாங்கி, தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

The post சாட்டையடி வாங்கிய அதிமுக மாஜி அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,Rasipuram ,Namakkal ,Eternal Sumangali Mariamman Temple ,
× RELATED தூங்கி வழிந்த நிர்வாகத்தால் சென்னை...