கூடலூர், நவ.5: கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் ஸ்டேட் வங்கி பகுதியில் நடுவே உள்ள தடுப்புச்சுவரில் ஊட்டியில் இருந்து வந்த லாரி மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநர் உயிர் தப்பினார். ஊட்டியில் இருந்து கேரட் லோடு ஏற்றி கேரளாவுக்கு நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் சென்ற மினி லாரி ஒன்று கூடலூர் நகர் அருகே ஸ்டேட் வங்கி பகுதியில் வந்தது.
அப்போது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவில் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் சாலை நடுவே இருந்த சிமெண்ட் தடுப்புகள் விலகியதோடு லாரி முன்பகுதி சேதம் அடைந்தது. இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து லாரியை அங்கிருந்து அகற்றி போக்குவரத்தை போலீசார் சீரமைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post கூடலூர்- ஊட்டி சாலையில் தடுப்புச்சுவரில் மோதி மினி லாரி சேதம்: ஓட்டுநர் உயிர் தப்பினார் appeared first on Dinakaran.