×

கோவை ரத்தினபுரியில் வியாபாரியிடம் செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார்

 

கோவை, நவ. 5: கோவை ரத்தினபுரி அருகே உள்ள சம்பத் தெருவை சேர்ந்தவர் முத்து (75). இவர். காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் ரத்தினபுரி சின்னபாலம் பகுதியில் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் அவரது செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார். இது குறித்து முத்து, ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அந்த வாலிபர் குறித்து விசாரித்தனர். அதில் அதே வாலிபர் லட்சுமி மில் பகுதியில் பார்த்தசாரதி என்பவரிடம், உறவினர்களிடம் பேச வேண்டும் என செல்போனை வாங்கி தப்பி ஓடியது தெரிய வந்தது.

அந்த வாலிபர் பறித்துச்சென்ற செல்போன் எண்களின் டவரை ஆய்வு செய்தபோது, கோவை அரசு மருத்துவமனை அருகே காட்டியது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று செல்போன் பறித்து தப்பிய வாலிபரை மடக்கி பிடித்தனர். அதில் அவர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (30) என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

The post கோவை ரத்தினபுரியில் வியாபாரியிடம் செல்போன் பறித்த வாலிபர் சிக்கினார் appeared first on Dinakaran.

Tags : Ratnapura, Coimbatore ,Coimbatore ,Muthu ,Sampath Street ,Ratinapuri, Coimbatore ,Crosscut Road, Gandhipuram ,Ratnapura Chinnapalam ,Ratnapura ,Dinakaran ,
× RELATED தாயை இழந்து தவிப்பு; முதுமலை முகாமில் குட்டி யானை பராமரிப்பு