×

கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவிலில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

 

சங்கரன்கோவில்,அக்.5: எல்ஐசி முகவர்களுக்கு 1956ம் ஆண்டு முதல் வழங்கி வந்த கமிஷனில் 7 சதவீதம் குறைத்து இருப்பதை கண்டித்தும், எல்ஐசி பாலிசிகளுக்கு ஜிஎஸ்டியை நீக்க கோரியும் சங்கரன்கோவில் எல்ஐசி அலுவலகம் முன்பு அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிளை கவுரவ தலைவர் மூக்கையா தலைமை வகித்தார்.

செயலாளர் குமார், மாநில கல்வி குழு உறுப்பினர் கணபதி, முகவர்கள் ஜெபாஸ்டின், சுப்பிரமணியன், ராஜு ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். வரும் பிப்ரவரி 11ம் தேதி டெல்லி நாடாளுமன்றம் முன்பு ஒரு லட்சம் முகவர்களை லிகாய் சார்பில் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் எல்ஐசி ஊழியர்கள் சங்க செயலாளர் ஹரிச்சந்திரன், வளர்ச்சி அதிகாரிகள் சங்க செயலாளர் முருகன், கூடுதல் செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முகவர் கணபதி நன்றி கூறினார்.

The post கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கரன்கோவிலில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Sankarankovil ,Sankarankoil ,All India LIC Agents Association ,
× RELATED தென்காசி கபடி போட்டியில் சங்கரன்கோவில் அணி வெற்றி