×
Saravana Stores

மழை காலங்களில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கும் அபாயம்

காரைக்குடி, நவ.5: கால்நடைகளை கோமாரி நோயில் இருந்து பாதுகாப்பது குறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளார். கால்நடைகளுக்கு மழை காலங்களில் கோமாரி நோய் தாக்க அதிக வாய்ப்புள்ளது. கோமாரி நோய் மாடு, எருமை, பன்றி, ஆடு என அனைத்து கால்நடைகளையும் தாக்கும். இது ஒரு தோற்று நோயாகும். நோயுற்ற கால்நடைகளின் உமிழ்நீர், சிறுநீர், பால், சாணம் மற்றும் அவை பயன்படுத்திய தண்ணீர், வைக்கோல், மேய்ச்சல் இடம் மற்றும் காற்று மூலம் பரவும்.இந்நோய் தாக்கப்பட்ட மாடுகளின் பாலை குடிக்கும் கன்றுகள் இறந்து விடும். சினை மாடுகளில் கன்று வீச்சு ஏற்படும். பிறந்த கன்றுகளுக்கு மூன்று மாதத்திற்குள் கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும். பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு இரண்டாவது தடுப்பூசி போட வேண்டும்.

பெரிய கால்நடைகளுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை தடுப்பூசி போட வேண்டும். நோய் உண்டான மாடுகளில் ஏற்பட்டுள்ள புண்களை 2 சதவீதம் பொட்டாசியம் பர்மாங்கனேட், 1 சதவீதம் சோடியம் ஹைட்ராக் சைடு, 1 சதவீதம் சோடியம் மெட்டாசிலிகேட் அல்லது 4 சதவீதம் சோடியம் கார்பனேட் கரைசல் கொண்டு கழுவவேண்டும். நோய் தொற்று ஏற்பட்ட கால்நடைகள் கட்டப்பட்டு இருந்த கொட்டகைகள் மற்றும் சுற்றுப்புறத்தை பார்மலின் 1 சதவீதம் அல்லது சோடியம் கார்பனேட் 4 சதவீதம் கரைசலை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இதன் மூலம் இந்த தொற்று நோயை கட்டப்படுத்தலாம் என தெரிவித்துள்ளனர்.

The post மழை காலங்களில் கால்நடைகளை கோமாரி நோய் தாக்கும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,
× RELATED தீபாவளிக்கு எந்தவகையிலும்...