×

திருத்துறைப் பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம்

 

திருத்துறைப்பூண்டி, நவ. 6: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியக் குழு கூட்டம் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஜோசப்,மாவட்ட தலைவர் முருகையன், மாவட்ட பொருளாளர் ராவணன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜவகர், விவசாய சங்கத்தின் ஒன்றிய செயலாளர் கருணாநிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.உரம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்கிட கோரியும் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய காலம் தாழ்த்தாமல் கடன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post திருத்துறைப் பூண்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Farmers Association ,Tiruthurai Bundi ,Thirutharapoondi ,Tiruvarur District Tiruthurapoondi ,Union Tamil Nadu Farmers Association ,Subramanian ,District Secretary ,Joseph ,District ,President ,Murugayan ,Treasurer ,
× RELATED ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்