×
Saravana Stores

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் மகா தீபத்தின்போது 11,500 பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்: ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உலகப் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று கார்த்திகை தீபத் திருவிழாவாகும். இவ்விழாவைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வரும் மகா தீபத்தை காண வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழாவில் 30 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, டிசம்பர் 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெற உள்ளது. நிறைவாக டிசம்பர் 13ம்தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலைமீது மகா தீபமும் ஏற்றப்படும்.

இந்நிலையில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் மகா தீபத்தின்போது 11,500 பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும் திருவண்ணாமலை கார்த்திகை பரணி தீபத்திற்கு 7,050 பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர், திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தின்போது மலை மீது ஏற 2000 பக்தர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்படுவர், திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீபத்தின்போது கோயிலுக்குள் கற்பூரம் ஏற்ற முற்றிலும் தடை, தீபத் திருவிழாவின்போது தங்கும் விடுதி கட்டணங்களை உயர்த்தினால் நடவடிக்கை எடுக்கப்படும், என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

The post திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் மகா தீபத்தின்போது 11,500 பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர்: ஆட்சியர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Maha Diphat ,Tiruvannamalai Karthigai Deepat festival ,Ruler ,Tiruvannamalai: ,Karthigai Deepat Festival ,Annamalaiyar Temple ,Tiruvannamalai ,Karthigai ,Maha Deepatha ,
× RELATED திருவண்ணாமலை கார்த்திகை தீபத்...