×
Saravana Stores

சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளி தற்காலிகமாக மூடல்

சென்னை: சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. 10 நாட்களுக்கு முன்பு பள்ளியில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 40 மாணவர்கள் மயக்கமடைந்தனர். 10 நாட்கள் மூடப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பள்ளியை திறந்தபோது 8 மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டது. மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதை அடுத்து பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.

சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1,200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடத்தின் 3-வது தளத்தில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவிகள் படித்து வருகிறார்கள். அதே தளத்தில் ஆய்வுக்கூடமும் உள்ளது.

இந்தநிலையில் கடந்த 25-ம் தேதி ரசாயன வாயு கசிவு ஏற்பட்டது. இதனால் வகுப்பறையில் இருந்த மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம், மூச்சுத்திணறல், கண் எரிச்சல், தொண்டை எரிச்சல் ஏற்பட்டது. சில மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதனால் சக மாணவிகள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக பாதிக்கப்பட்ட 45 மாணவிகளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனையடுத்து வாயுக்கசிவு ஏற்பட்ட அந்த பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 10 நாட்களுக்கு பின் இன்று (04-11-2024) பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. முதல் நாளில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்திருந்தனர். எங்கிருந்து வாயு கசிகிறது என கண்டுபிடிக்க முடியாத நிலையில் ஆசிரியர்களுடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இந்நிலையில் வாயு கசிவு ஏற்பட்ட பள்ளி தற்காலிகமாக சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. தனியார் பள்ளியில் வடக்கு வட்டார காவல்துணை ஆணையர் கட்டா ரவி தேஜா ஆய்வு மேற்கொண்ட நிலையில் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆய்வு செய்த பிறகு மீண்டும் பள்ளி திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என்று பள்ளி முதல்வர் கூறியுள்ளார்.

The post சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளி தற்காலிகமாக மூடல் appeared first on Dinakaran.

Tags : Thiruvotiyur Private School ,Chennai ,Chennai Thiruvotiyur Private School ,
× RELATED சென்னை திருவொற்றியூர் தனியார் பள்ளி தற்காலிகமாக மூடல்..!!