×
Saravana Stores

2036ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்தது இந்தியா!

டெல்லி: ஒலிம்பிக்-2036 போட்டியை நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்.1ல் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் கடிதம் எழுதி இருப்பதாக ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒலிம்பிக் நடத்துவதற்கு தகுதியான நகரங்கள் மற்றும் அவற்றில் இருக்கும் வசதிகள் உள்பட பல்வேறு தகவல்களும், ஒலிம்பிக் போட்டி நடத்த அனுமதி அளித்தால் இந்திய அரசு என்னென்ன உதவிகள் செய்யும் என்ற விவரங்களும் அந்த விண்ணப்பத்தில் இடம் பெற்றுள்ளன.

2032ம் ஆண்டு வரையிலான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துபவர்கள் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளனர். 2032ன் ஹோஸ்டிங் உரிமை ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகருக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், இந்தியா இப்போது ஒலிம்பிக்-2036 நடத்த உரிமை கோரியுள்ளது.

2036ல் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியா நடத்தும் என பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி செங்கோட்டையில் இருந்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இது தொடர்பாக கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா போட்டிக்கு அனுமதி கிடைத்தால், விளையாட்டுகள் அகமதாபாத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post 2036ல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்தது இந்தியா! appeared first on Dinakaran.

Tags : India ,Olympic Games ,Delhi ,Olympics ,Indian Olympic Association ,International Olympic Council ,Union Sports Minister ,
× RELATED டெல்லியில் பட்டாசுகளுக்கு...