×

ஜார்க்கண்ட் வளர்ச்சிக்காக பாஜக முழு முயற்சி எடுக்கிறது: பிரதமர் மோடி பேச்சு

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாஜக முழு முயற்சியையும் நேர்மையாக செய்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் இளைஞர்களின் திறன்களை அதிகரிப்பது, வாய்ப்புகளை வழங்குவது அரசின் பொறுப்பு. ஆளும் ஜேஎம்எம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இளைஞர்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. ஜார்க்கண்டின் வசதி, பாதுகாப்பு, செழிப்பு போன்ற உத்தரவாதத்துடன் பாஜக களமிறங்கியுள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சேர்ப்பில் முறைகேடு, வினாத்தாள் கசிவு போன்றவை வாடிக்கையாகிவிட்டது. எனவே ஜார்க்கண்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 3 லட்சம் பணியிடங்கள் வெளிப்படையாக நிரப்பப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

The post ஜார்க்கண்ட் வளர்ச்சிக்காக பாஜக முழு முயற்சி எடுக்கிறது: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Jharkhand ,PM Modi ,Narendra Modi ,JMM ,Congress ,
× RELATED சொல்லிட்டாங்க…