×
Saravana Stores

வக்பு வாரிய மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற குழுவிலிருந்து விலகுவோம்; எதிர்க்கட்சி எம்பிக்கள் எச்சரிக்கை: தன்னிச்சையாக தலைவர் முடிவு எடுப்பதாக சபாநாயகருக்கு கடிதம்


புதுடெல்லி: வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்து வரும் நாடாளுமன்ற குழுவில் இருந்து விலகப் போவதாக, எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் எச்சரித்துள்ளனர். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை ஆய்வு செய்யும் குழு, ஜகதாம்பிகா பால் தலைமையில் அமைக்கப்ப்டடுள்ளது. இக்குழுவில், திமுகவின் எம்பிக்கள் ஆ.ராசா, முகமது அப்துல்லா, காங்கிரசின் முகமது ஜாவேத், இம்ரான் மசூத், ஏஐஎம்ஐஎம் கட்சியின் அசாதுதீன் ஒவைசி, ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட பலர் இடம் பெற்றுள்ளனர். அண்மையில் நடந்த குழுவின் கூட்டத்தில் திரிணாமுல் எம்பி கல்யாண் பானர்ஜிக்கும் பாஜ எம்பிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை கல்யாண் பானர்ஜி அடித்து உடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இக்குழுவின் தலைவராக உள்ள பாஜவின் ஜகதாம்பிகா பால், கூட்ட தேதிகளை முடிவு செய்வது, யாரிடம் விசாரிப்பது உள்ளிட்ட பல விஷயங்களில் தன்னிச்சையாக செயல்படுவதாகவும், யாரிடமும் கலந்தாலோசிப்பது கிடையாது என்றும், எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுதொடர்பாக, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு இவர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

The post வக்பு வாரிய மசோதாவை ஆய்வு செய்யும் நாடாளுமன்ற குழுவிலிருந்து விலகுவோம்; எதிர்க்கட்சி எம்பிக்கள் எச்சரிக்கை: தன்னிச்சையாக தலைவர் முடிவு எடுப்பதாக சபாநாயகருக்கு கடிதம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Jagathambika Pal.… ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற குழு நடவடிக்கைகளை வெளியிடவில்லை: ஜேபிசி தலைவர் விளக்கம்