*சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு
மஞ்சூர் : மஞ்சூர் சாலையோரங்களில் பூத்துள்ள காட்டு டேலியா மலர்கள், காட்டு சூரியகாந்தி மலர்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள சாலையோரங்களில் ஏற்கனவே ரெட்லீப், பாட்டில்பிரஷ், சேவல் கொண்டை, காட்டு சூரியகாந்தி உள்ளிட்ட பல வகை வண்ண மலர்கள் பூத்துள்ளது. இந்நிலையில் தற்போது வௌ்ளை மற்றும் வெளிர் ஊதா நிறங்களில் காட்டு டேலியா மலர்கள் ஏராளமாக பூத்து குலுங்குகின்றன. ‘டேலியா ஆஸ்திரியஸ்’ என்ற தாவர வகையை சேர்ந்த மலர்கள் ஆண்டுக்கொருமுறை பூக்கும் தன்மை கொண்டதாக கூறப்படுகிறது.
இதேபோல் காட்டு சூரியகாந்தி மலர்களும் ஏராளமாக பூத்துள்ளது. மஞ்சள், சந்தனம் நிறங்களில் காட்டு சூரியகாந்தி மலர்கள் ஏராளமாக பூத்துக்குலுங்குகின்றன. ‘ஹீலியன்ந்தாஸ் டெபீலிஸ்’ என்ற தாவர வகையை சேர்ந்த மலர்கள் செடிகளில் கொத்து, கொத்தாக பூத்துள்ளது. மஞ்சூர் ஊட்டி சாலை மற்றும் மஞ்சூர் எடக்காடு சாலையோரங்களில் உள்ள செடிகளில் கொத்து, கொத்தாக பூத்துள்ள மலர்கள் சுற்றுப்புறங்களில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு வரும் பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகிறது. பெரும்பாலான பயணிகளும் கண்களை கவரும் காட்டு டேலியா மலர்களின் அருகில் நின்று செல்பி எடுப்பதிலும் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர்.
The post மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் சாலையோரம் பூத்துக்குலுங்கும் காட்டு டேலியா மலர்கள் appeared first on Dinakaran.