சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகலை வழங்கக் கோரி ஆம்ஸ்ட்ராங் சகோதரர் வீரமணி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறை நீதிமன்றத்தில் 5000 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ள நிலையில் நகலை தங்களுக்கும் வழங்கவேண்டும் என்று ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
வழக்கின் முழு விசாரணையிலும் தங்கள் தரப்பு பங்கேற்க உள்ளதால் குற்றப்பத்திரிகை நகல் வழங்க வேண்டும் என்றும் ஏற்கனவே குற்றவாளிகளுக்கு பென் டிரைவ் முலமாக குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில் அனைத்துமே நகலாக வழங்க வேண்டும் என்று குற்றவாளிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு நகல் வழங்கப்படாத நிலையில் தற்போது ஆம்ஸ்ட்ராங் தரப்பும் தங்களுக்கும் குற்றப்பத்திரிகை வழங்கவேண்டும் என்று கோரிக்கை அடங்கிய மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குற்றப்பத்திரிகை நகலை வழங்கக் கோரி ஆம்ஸ்ட்ராங் சகோதரர் எழும்பூர் நீதிமன்றத்தில் மனு appeared first on Dinakaran.