×
Saravana Stores

ஊட்டி தாவரவியல் பூங்காவில் பெரிய புல் மைதானத்தில் சேதம் அடைந்த பகுதிகளில் புற்கள் பதிப்பு பணிகள் தீவிரம்

ooty, Grass fields, Botanical Gardenஊட்டி : ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் புல் மைதானம் சீரமைப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா உள்ளிட்ட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. இதில் ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்கா சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமாக விளங்குகிறது.

இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க பூங்காவின் பல்வேறு இடங்களிலும் உள்ள பாத்திகளில் பல்வேறு வண்ண வண்ண மலர்கள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. இது தவிர பூங்காவில் புல் மைதானங்கள் உள்ளன. இவற்றில் சுற்றுலா பயணிகள் விளையாடி மகிழ்வார்கள். இந்த சூழலில் இரண்டாவது சீசனை முன்னிட்டு அதிக அளவு வந்தனர்.

அந்த சமயத்தில் பெய்த மழையின் போது ஈரமான புல்வெளிகளை சுற்றுலா பயணிகள் பயன்படுத்தியதால் பல இடங்கள் சேரும் சக அதிகமாக மாறி புற்கள் சேதம் அடைந்தன. இதனிடையே நடப்பு ஆண்டிற்கான இரண்டாவது சீசன் ஏறக்குறைய முடிவுக்கு வந்த நிலையில் பூங்காவில் உள்ள பெரிய புல் மைதானம் சீரமைப்பு பணிகளுக்காக மூடப்பட்டு உள்ளது. புற்கள் நன்கு வளரும் வகையில் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.

மைதானத்தில் சேதம் அடைந்த புற்களுக்கு பதிலாக அவற்றை அகற்றிவிட்டு புதிதாக புற்கள் பதிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post ஊட்டி தாவரவியல் பூங்காவில் பெரிய புல் மைதானத்தில் சேதம் அடைந்த பகுதிகளில் புற்கள் பதிப்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : FEEDER ,PARK ,Nilgiri district ,Ooty State Botanical Park ,Rose Garden ,Kunnur Sims Park ,Vampire Park ,Dinakaran ,
× RELATED விதி மீறலில் ஈடுபட்ட 2 உரக்கடைகளில் விற்பனைக்கு தடை