×

கொடைக்கானலில் தொடர்மழை அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

Kodaikanal, water falls*விடுமுறையில் வந்த சுற்றுலாப்பயணிகள் உற்சாகம்

கொடைக்கானல் : தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக நீரோடைகள், அருவிகள், ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதேபோல் மலைச்சாலைகள், மலைப்பகுதிகளில் ஆங்காங்கே பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் புதியதாக தற்காலிக நீர்வீழ்ச்சிகள் தோன்றி பார்ப்பவர்களின் கண்களை கவர்ந்து வருகிறது.கொடைக்கானல் நுழைவாயில் பகுதியில் அமைந்துள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி அருவி, வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவி, தேவதை அருவி, புலிச்சோலை அருவி, மூலையாறு அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளிலும் நீர்வரத்து அதிகரிப்பால், தற்போது தீபாவளி விடுமுறைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் இவற்றை ரசிப்பதுடன், அவற்றின் முன்பாக நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து உற்சாகமடைகின்றனர். மேலும் மலைப்பகுதிகளில் பெய்த தொடர்மழையால் மலைமுகடுகள் அனைத்தும் கண்களை கவரும் வகையில் பச்சைப்பசேல் என பசுமை போர்த்தி காட்சியளிக்கிறது.

The post கொடைக்கானலில் தொடர்மழை அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Silver Falls ,Dindigul district ,Kodiakanal ,Dinakaran ,
× RELATED கொடைக்கானலில் பனி பாதிப்பில் இருந்து...