பார்சிலோனா: ஸ்பெயினில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 63 பேர் பலியாகி உள்ளனர். ஸ்பெயினில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கிய நிலையில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதானல் ஆயிரக்கணக்கான மக்கள் குடியிருப்புக்களில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர். போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலமாக கார் மற்றும் வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
பாதிக்கப்பட்ட இடங்களில் சுமார் ஆயிரம் வீரர்கள் இடம்பெற்ற அவசர மீட்பு குழுவினர் மீட்புபணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல இடங்களில் கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இந்நிலையில் சுமார் 300 பேருடன் சென்ற அதிவேக ரயில் மலாகா அருகே திடீரென தடம் புரண்டது. எனினும் இதில் யாருக்கும் காயமேற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வலென்சியா நகரம் மற்றும் மாட்ரிக் இடையே ரயில்சேவை தடைபட்டது. இதனிடையே வெள்ளத்தில் சிக்கி 63 வரை உயிரிழந்துள்ளனர்.
The post ஸ்பெயினில் திடீர் வெள்ளம்: 63 பேர் பலி appeared first on Dinakaran.