×
Saravana Stores

தீபத் திருவிழாவானது தீய சக்திகளுக்கு எதிராக நல்ல சக்திகள் வெற்றி பெற வழிவகுக்கும்: தீபாவளி வாழ்த்து தெரிவித்த டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபா் தோ்தல் வரும் வரும் 5ம் தேதி நடைபெற உள்ளது. அங்கு ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேபோல் அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி சாா்பில் முன்னாள் அதிபா் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வேட்பாளா் கமலா ஹாரிசுக்கும், டிரம்புக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருமே தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இருவரும் மாறி மாறி பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.இந்த சூழலில் உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் துணை அதிபர் கமலாஹாரிஸ் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் , “உலகம் முழுவதும் உள்ள 1 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுடன் நாங்களும் தீப ஒளியை ஏற்றி, தீமைக்கு எதிராக நன்மைக்கான போராட்டத்தையும், அறியாமைக்கு எதிரான அறிவையும், இருளுக்கு எதிரான ஒளியையும் கொண்டாடுகிறோம்.

தீபத் திருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என்று அதில் பதிவிட்டுள்ளார். இதேபோல் முன்னாள் அதிபா் டொனால்டு டிரம்ப், தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், “அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமாலா ஹாரிசுக்கு இந்துக்கள் மீது அக்கறையில்லை. வங்காளதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், பிற சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை கடுமையாக கண்டிக்கிறேன். இந்த மக்கள் அங்குள்ள உள்ளூர் கும்பல்களால் தாக்கப்படுகிறார்கள். நான் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் இப்படி நடந்திருக்க விட்டிருக்க மாட்டேன். அமெரிக்கா உள்பட உலகம் முழுவதும் உள்ள இந்துக்களை கமலாவும், பைடனும் புறக்கணித்துவிட்டார்கள். இஸ்ரேல் தொடங்கி உக்ரைன் வரை பல்வேறு முக்கிய விவகாரங்களில் கமலாவும், ஜோ பைடனும் பெரிய இடராக நமக்கு அமைந்துவிட்டார்கள்.

ஆனால், நான் ஆட்சிபொறுப்பேற்ற பின்னர் அமெரிக்காவை மீண்டும் வலிமையாக்குவோம். வலிமை மூலம் உலகில் அமைதியை திரும்பக் கொண்டு வருவோம். இடதுசாரிகளின் மத எதிர்ப்பு செயல்பாடுகளிலிருந்து அமெரிக்க இந்துக்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம். இந்துக்களின் விடுதலைக்காக நாங்கள் போராடுவோம். எனது நிர்வாகத்தின்கீழ், இந்தியாவுடனான நமது அளப்பறியா பங்களிப்பையும், எனது நல்ல நண்பர் பிரதமர் மோடியுடனான உறவையும் நாம் நிச்சசயம் வலுப்படுத்துவோம்கமலா ஹாரிஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் சிறு வணிகத்தையெல்லாம் அதிக வரி விதிப்பு நடவடிக்கைகளால் அழித்துவிடுவார். ஆனால், என்னுடைய தலைமையிலான நிர்வாகத்தின்கீழ், வரி ரத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதன்மூலம், வரலாற்றில் மிகச்சிறந்த பொருளாதாரமாக அமெரிக்கா கட்டமைக்கப்படும். மீண்டும் அமெரிக்காவை சிறப்பான தேசமாக்குவோம். அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி நல் வாழ்த்துகள். தீபத் திருவிழாவானது தீய சக்திகளுக்கு எதிராக நல்ல சக்திகள் வெற்றி பெற வழிவகுக்கும் என நான் முழுமையாக நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

The post தீபத் திருவிழாவானது தீய சக்திகளுக்கு எதிராக நல்ல சக்திகள் வெற்றி பெற வழிவகுக்கும்: தீபாவளி வாழ்த்து தெரிவித்த டொனால்டு டிரம்ப், கமலா ஹாரிஸ் appeared first on Dinakaran.

Tags : Deepat festival ,Donald Trump ,Kamala Harris ,Diwali ,Washington ,US ,Vice Chancellor ,Democratic Party ,Republican Party ,Dinakaran ,
× RELATED அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு 3 நாட்களே...