×

சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் திமுக அழுத்தம் கொடுக்கும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் ஊராட்சியில் அமைச்சர் துரைமுருகன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘சாதி வாரி கணக்கெடுப்பு தொடர்பான விவகாரம் நாடாளுமன்றத்தில் வரும்போது இதுதொடர்பாக அழுத்தமான கோரிக்கை திமுக சார்பில் வைக்கப்படும். நாங்கள் பூண்டியில் இருந்து ஒரு கால்வாய் வெட்டி கிருஷ்ணா நீரை செம்பரம்பாக்கத்திற்கு கொண்டு வந்து சேர்க்கிறோம். இதில் கழிவுகளை கொட்டுகிறார்கள். இதை எதிர்த்து வழக்கு தொடுத்துள்ளோம். அது நடந்தும் வருகிறது. அதேபோல் பாலாற்றில் கழிவுகளை கொட்டுபவர்கள் குறித்து ஊர் மக்கள் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

The post சாதி வாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் திமுக அழுத்தம் கொடுக்கும்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : DIMUKA ,MINISTER ,DURAIMURUGAN ,Vellore ,Kadpadi, Vellore district ,Parliament ,Dinakaran ,
× RELATED திமுக கலந்தாய்வு கூட்டம்