×
Saravana Stores

தண்டவாளத்தில் பெரிய கல்லை வைத்து பொதிகை எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி

தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு நேற்று மாலை 6.25 மணிக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. கடையநல்லூர் ரயில் நிலையத்தை அடுத்த போகநல்லூர் பகுதியில் ரயில் சென்றபோது தண்டவாளத்தின் நடுவே சுமார் 10 கிலோ எடை கொண்ட பெரிய கல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இருப்பினும் ரயில் இன்ஜினின் ஓட்டுனர் சாமர்த்தியமாக ரயிலை ஓட்டி சென்றதால் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறாமல் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து ரயில் இஞ்சினின் ஓட்டுனர் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து திருச்சி ரயில்வே எஸ்.பி.ராஜன் தலைமையில் திருநெல்வேலி ரயில்வே டி.எஸ்.பி. இளங்கோவன் மற்றும் ரயில்வே போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தண்டவாளங்களை ஆய்வு செய்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் செங்கோட்டை – சென்னை பொதிகை ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதியாக இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் 26ம் தேதி சங்கனாப்பேரி பகுதியில் ரயில் தண்டவாளத்தில் 10 கிலோ எடை கொண்ட கல் மர்ம நபர்களால் வைக்கப்பட்டிருந்ததையடுத்து வழக்குப்பதிவு செய்து வட மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தண்டவாளத்தில் பெரிய கல்லை வைத்து பொதிகை எக்ஸ்பிரசை கவிழ்க்க சதி appeared first on Dinakaran.

Tags : Tenkasi ,Sengottai ,Tenkasi district ,Chennai ,Pokanallur ,Kadayanallur railway ,Dinakaran ,
× RELATED நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில்...