×
Saravana Stores

கோவிலில் பக்தியுடன் கரகம் எடுத்து ஆடலாம். நடனம் ஆடலாமா? :ரீலிஸ் எடுத்த பெண் தர்மகர்த்தாவிடம் ஐகோர்ட் கேள்வி

சென்னை : திருவேற்காடு கோயிலில் ரீல்ஸ் எடுத்த முன்னாள் பெண் தர்மகர்த்தா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார். சென்னை, திருவேற்காட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கருமாரியம்மன் கோயிலில், 12 பெண்களுடன் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்து, சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள கோயில் பெண் தர்மகர்த்தா வளர்மதி மீது நடவடிக்கை எடுக்க, இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிடக் கோரி, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், “கோயில் வளாகத்துக்குள் மொபைல் போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதை புறக்கணித்து விட்டு, பெண் தர்மகர்த்தா கோயில் வளாகத்தில் மொபைல் போன் பயன்படுத்தியதுடன், ரீல்ஸ் வீடியோ எடுத்தது பக்தர்களின் உணர்வை புண்படுத்தியுள்ளார்” எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில் திருவேற்காடு கோவிலில் ரீல்ஸ் வீடியோ எடுத்த அறங்காவலர் மற்றும் பெண் ஊழியர்களின் செயலுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர். இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘திருவேற்காடு கோவிலில், எடுக்கப்பட்ட ரீல்ஸ் வீடியோவில், நடித்த முன்னாள் பெண் தர்மகர்த்தா மன்னிப்பு கோரியுள்ளதாக அறநிலையத்துறை ஐகோர்ட்டில் தகவல் தெரிவித்தது. இதற்கு பதிலளித்த நீதிபதி, “கடவுள் மீது பக்தி உள்ளவர்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும். கோவிலில் பக்தியுடன் கரகம் எடுத்து ஆடலாம். நடனம் ஆடலாமா? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து, பெண் தர்மகத்தாவின் மன்னிப்பை ஏற்று, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை, சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் முடித்து வைத்தனர். மேலும் ரீல்ஸில் நடித்த ஊழியர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

The post கோவிலில் பக்தியுடன் கரகம் எடுத்து ஆடலாம். நடனம் ஆடலாமா? :ரீலிஸ் எடுத்த பெண் தர்மகர்த்தாவிடம் ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Icourt ,Dharmakartha ,Relis ,Chennai ,Thiruvengad Temple ,Karumaryamman Temple ,Thiruvechat, Chennai, Dharmakarta ,
× RELATED மருத்துவமனைகள் தொடர்பான விளம்பரங்களை...