×

மகனுடன் பைக்கில் சென்றபோது மாநகர பஸ் மோதி தாய் படுகாயம்

தண்டையார்பேட்டை, அக்.29: புது வண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டத்தை சேர்ந்த இந்திரகுமாரி (49), நேற்று தனது மகன் அரவிந்த்துடன் பைக்கில் தண்டையார்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் எதிரே சென்றபோது, பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்தார்.அப்போது, அவ்வழியே சென்ற மாநகர பேருந்து (த.எ.56 ஏ) இந்திரகுமாரி மீது ஏறியது. அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

The post மகனுடன் பைக்கில் சென்றபோது மாநகர பஸ் மோதி தாய் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Indirakumari ,Pudu Vannarpettai Nagooran ,Aravind ,Thandaiyarpet RTO ,
× RELATED வண்ணாரப்பேட்டை எம்சி ரோட்டில்...