×
Saravana Stores

தேர்வு நடத்தப்பட்ட 4 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: சுமார் 16 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியானது. 8,932 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியானது. tnpscresults.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பணிகளில் காலியாக உள்ள குரூப் 4 பிரிவு பணியிடங்களை நிரப்ப கடந்த ஜூன் 9ல் தேர்வு நடத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)குரூப்-4 பணிகளில் காலி இடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. கிராம நிரவாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை உள்ளடக்கி மொத்தம் 6,244 காலி இடங்கள் இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கு 20 லட்சத்து 36 ஆயிரத்து 777 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்வை 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் எழுதினர்.

அதன் பிறகு காலி பணியிடங்களின் எண்ணிக்கையை அவ்வப்போது டிஎன்பிஎஸ்சி அதிகரித்து வந்தது. இதையடுத்து குரூப் 4 பணிகளுக்கான காலி இடங்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 932 ஆக உயர்ந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 559 பணியிடங்கள் கூடுதலாக சேர்ப்பு. இதனால் மொத்த காலி பணியிடங்களின் எண்ணிக்கை 9,491 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில் சுமார் 16 லட்சம் பேர் எழுதிய டிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வு முடிவுகள் இன்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவை பதிவிட்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர். தேர்வு நடத்தப்பட்ட 4 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

 

The post தேர்வு நடத்தப்பட்ட 4 மாதத்தில் குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி appeared first on Dinakaran.

Tags : TNBSC ,Chennai ,TNPSC ,DNBSC ,Dinakaran ,
× RELATED குரூப் 4 தேர்வு முடிவின் படி...