×

லெபனானில் 3 தளபதிகள் உட்பட 70 ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பலி: இஸ்ரேல் ராணுவம் தகவல்

பெய்ரூட்: லெபனானில் கடந்த 48 மணி நேரத்தில் 3 தளபதிகள் உட்பட 70 ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் தற்போது லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், தெற்கு லெபனானுக்குள் புகுந்து ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளை தகர்த்து வருகிறது.

அந்த வகையில் இன்று மதியம் 12 மணியுடன் கடந்த 48 மணி நேர காலகட்டத்தில் 3 ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதிகள் உட்பட 70 ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை கொன்றதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

மேலும் தெற்கு லெபனானில் வசிக்கும் மக்களை மாற்று இடங்களுக்கு செல்லுமாறு இஸ்ரேல் ராணுவம் அறிவுறுத்தி உள்ளதால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே காசா பகுதியை முற்றிலும் அழித்த இஸ்ரேல், தற்போது லெபனானுக்குள்ளும் புகுந்து தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது.

The post லெபனானில் 3 தளபதிகள் உட்பட 70 ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பலி: இஸ்ரேல் ராணுவம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Hezbollah ,Israel ,BEIRUT ,Lebanon ,southern Lebanon ,Israel Military ,Dinakaran ,
× RELATED ஏமனில் திடீர் தாக்குதல் உலக சுகாதார...