×

தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

தஞ்சை: தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உட்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்திருந்தது. 2011-2016 காலகட்டத்தில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தபோது வைத்திலிங்கம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் உறந்தைராயன்குடிகாட்டில் உள்ள வைத்திலிங்கம் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சென்னையில் 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது. திருவேற்காட்டில் உள்ள கட்டுமான நிறுவனம், சென்னையில் உள்ள எம்எல்ஏ விடுதியில் உள்ள வைத்திலிங்கம் அறை, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

The post தஞ்சை ஒரத்தநாடு அருகே உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,Vaithilingam ,Thanjavur Thanjavur ,Thanjavur ,
× RELATED தூங்கி வழிந்த நிர்வாகத்தால் சென்னை...