×
Saravana Stores

ஏசி பெட்டிகளில் பயன்படுத்தப்படும் பெட்ஷீட்கள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுகிறது: ஆர்டிஐ தகவல்

சென்னை: ஏசி பெட்டிகளில் பயன்படுத்தப்படும் பெட்ஷீட்கள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுகிறது என ஆர்டிஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை போக்குவரத்து முறையாக இந்திய ரயில்வே உள்ளது. சுமார் 75,000 கிலோமீட்டருக்கு மேல் ரயில் பாதைகளுடன், இந்திய ரயில்வே உலகின் 4வது பெரிய ரயில்வே நெட்வொர்க் ஆகும். இதில் 45 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகள் உள்ள. ஒரே அரசாங்கத்தால் இயக்கப்படும் மிக முக்கியமான ரயில் பாதையும் இந்திய ரயில்வே தான்.

வசதியான பயணம், கட்டணம் குறைவு உள்ளிட்ட பல காரணங்கள் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். குறிப்பாக தொலைதூர பயணங்கள் என்று வரும் போது ரயில் பயணங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு அம்சங்களை செயல்படுத்தி வருகிறது. அதே போல் ரயில்வே துறை மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. சாதாரண பெட்டிகளை குறைப்பது, இந்தி திணிப்பு, சுகாதாரமற்ற உணவு, சுத்தமில்லாத ரயில் என அடுக்கி கொண்டே போகலாம், கடந்த சில நாட்களாக சென்னை-நாகர்கோவில், சென்னை-கோவை, என பல ரயில்களில் ஏசி வேலை செய்யாதது, போர்வைகள் சுத்தமாக இல்லாதது என சொல்லலாம் ரயில்வே துறையின் லட்சணங்களை.

இந்நிலையில், ஏசி வகுப்புகளில் பயணிகளுக்கு வழங்கப்படும் போர்வைகள் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை துவைக்கப்படுகிறது என ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது, இதற்கு ரயில்வே அமைச்சகத்தின், ஹவுஸ் கீப்பிங் மேலாண்மை பிரிவு அதிகாரி ரிஷு குப்தா தெரிவிக்கையில், ‘‘கீழே விரிக்க கொடுக்கப்படும் போர்வைகள் ஒவ்வொரு முறையும் துவைக்க அனுப்பி வைக்கப்படுகிறது, கம்பளிகள் மாதத்திற்கு ஒருமுறை துவைக்க அனுப்பப்படுகிறது’’ என தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ரயில்வே துறை சார்ந்த ஊழியர்கள் தெரிவிக்கையில் பல அதிர்ச்சியான விஷயங்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, பெரும்பாலும் போர்வைகளில் அழுக்கு, கறை, துர்நாற்றம், ஈரப்பதம் இல்லையெனில் அவை மடித்து மீண்டும் பயன்பாட்டுக்காக ரயில் பெட்டியிலேயே வைக்கப்படும். அழுக்கு இருந்தால் மட்டும் அவை துவைப்பதற்கு போடப்படும். கம்பளிகள் கனமானவை. அவற்றை துவைப்பது கடினமானது. எனவே, அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ரயில்வேயில் பயன்படுத்தப்படும் போர்வை, கம்பளி, தலையணை உறை ஆகியவற்றை துவைக்க 46 சலவை மையங்கள் இருக்கின்றன. இந்த மையம் அமைந்துள்ள இடம், சலவை இயந்திரம் ஆகியவை ரயில்வே துறைக்கு சொந்தமானவையாகும். ஆட்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி செய்து வருகின்றனர் என தெரிவித்தனர். வசதியான பயணம், கட்டணம் குறைவு உள்ளிட்ட பல காரணங்கள் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.

The post ஏசி பெட்டிகளில் பயன்படுத்தப்படும் பெட்ஷீட்கள் மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுகிறது: ஆர்டிஐ தகவல் appeared first on Dinakaran.

Tags : RTI ,CHENNAI ,Indian Railways ,Dinakaran ,
× RELATED ரயில் விபத்து ஏற்படுத்தும்...