×
Saravana Stores

கனடா விவகாரம் மதிக்காத உறவுகளில் நம்பிக்கை இல்லை: பிரதமர் மோடி பேச்சு

புதுடெல்லி: காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடா பிரதமர் ட்ரூடோ குற்றம்சாட்டுகிறார். இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் தூதர்களை திரும்பப் பெற்றுள்ளதால் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், என்டிடிவி உலக உச்சிமாநாட்டில் நேற்று பேசிய பிரதமர் மோடி கனடா பெயரை குறிப்பிடாமல் கூறுகையில், ‘‘இந்தியா மதிக்காத உறவுகளை உருவாக்கவில்லை.

எங்கள் உறவுகள் நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டவை. உலகமும் இதை உணர்ந்துள்ளது. இந்தியாவின் முன்னேற்றத்தை பார்த்து உலகம் மகிழ்ச்சி கொள்கிறது. இந்தியாவின் சந்திரயான் வெற்றியை உலகம் திருவிழா போல் கொண்டாடியது. இந்தியாவின் வளர்ச்சி, பொறாமையைத் தூண்டாது. ஏனெனில் அதன் முன்னேற்றம் முழு உலகத்திற்கும் பயனளிக்கிறது. பல துறைகளில் உலகின் எதிர்காலமாக இந்தியா திகழ்கிறது’’ என்றார்.

The post கனடா விவகாரம் மதிக்காத உறவுகளில் நம்பிக்கை இல்லை: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Canada ,Modi ,New Delhi ,Trudeau ,India ,Nijjar ,NTTV World Summit ,
× RELATED கனடாவின் பிராம்ப்டனில் கோயில் மீது...