×

கூடங்குளம் அருகே லிப்ட் கேட்ட லாரி டிரைவரிடம் ரூ.22 ஆயிரம் பறிப்பு

நெல்லை, அக். 19: கூடங்குளத்தில் லிப்ட் தருவதாக கூறி கேரள லாரி டிரைவரிடம் ரூ.22 ஆயிரம் பறித்துச் சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம், திருவனந்தபுரம் குன்னத்துக்கல் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(48). இவர் களியக்காவிளையில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சமீபத்தில் கூடங்குளம் அருகேயுள்ள சங்கநேரி பகுதியில் உள்ள ஒரு குவாரிக்கு லாரியில் சென்றார். அந்த பகுதியில் லாரியை நிறுத்தி விட்டு அங்கிருந்த ஒரு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்தார். அப்போது பைக்கில் வந்த இரண்டு பேரிடம் குவாரிக்கு செல்ல வழி கேட்டார். அப்போது தாங்களும் அந்த பக்கம் தான் செல்வதாக கூறி ஜெயக்குமாரை பைக்கில் ஏற்றிச் சென்றனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று ஜெயக்குமாரை மிரட்டி ரூ.22 ஆயிரம், செல்போன், பர்ஸ் ஆகியவற்றை பறித்து விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பணகுடி போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் 2 பேரை தேடி வருகின்றனர்.

The post கூடங்குளம் அருகே லிப்ட் கேட்ட லாரி டிரைவரிடம் ரூ.22 ஆயிரம் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Kudankulam ,Kerala ,Jayakumar ,Gunnathukkal, Thiruvananthapuram, Kerala ,Kaliakavilai ,
× RELATED குவாரியில் பாறை சரிந்து டிரைவர் பலி