×

அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து அரசாணை வெளியீடு..!!

சென்னை: அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வீடு வாங்கிய குறிப்பிட்ட மாதத்தில் சொசைட்டி, சங்கம் நிறுவி பதிவு செய்ய வேண்டும். சங்க துணை விதிகளை உருவாக்க வேண்டும்; சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் 4 உரிமையாளர்கள் இருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் நிர்வாக குழுவை நியமிக்க வேண்டும் என அரசாணை வெளியிட்டுள்ளது.

The post அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,
× RELATED திருச்சியில் கலைஞர் நூலகம்...