×

மேலூர் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்: தண்ணீர் திறப்புக்கு முன் நடவடிக்கை

 

மேலூர், செப். 13: மேலூர் பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக விரைவில் தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில், நீர்வரத்து கால்வாய்களை சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. பெரியாறு, வைகை அணைகளின் கடைமடை விவசாய பகுதியாக, மேலூர் ஒரு போக பாசன பகுதி அமைந்துள்ளது. அணையின் நீர்மட்ட அளவின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் இப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன வசதிக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பாண்டில் மேலூர் பகுதி கடைமடை விவசாயிகளின் பாசனத்திற்காக, செப்.15ல் வைகை அணையில் தண்ணீர் திறக்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, மேலூர் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு பாசன கால்வாய்களில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலூர் நகராட்சி நிர்வாக பொறியாளர் முத்துக்குமார் முன்னிலையில், இந்த வேலைகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் கால்வாய் சுத்தம் செய்யும் பணிகளை, பொதுப்பணித் துறை செய்து வந்தது. தற்போது நகராட்சி எல்லைக்குள் இருக்கும் கால்வாய் பகுதிகளை சுத்தம் செய்யும் பணிகள், பொதுப்பணித்துறை அறிவுறுத்தலின் பேரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

The post மேலூர் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு கால்வாய் சுத்தம் செய்யும் பணி தீவிரம்: தண்ணீர் திறப்புக்கு முன் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Mulla Periyar ,Melur ,Periyar ,Vaigai ,Dinakaran ,
× RELATED முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு...