×
Saravana Stores

மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000..விடியல் பேருந்து பயணம்; 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் அரசு: அமைச்சர் உதயநிதி புகழாரம்

சென்னை: 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் அரசுக்கு அமைச்சர் உதயநிதி புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டிற்கே வழிகாட்டும் நம் திராவிட மாடல் அரசு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000 – விடியல் பேருந்து பயணம் – மாணவியருக்கு புதுமைப்பெண் திட்டம் – முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டம் – மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் திட்டம் – நான் முதல்வன் – விவசாயிகளுக்கென தனி வேளாண் நிதி நிலை அறிக்கை – விளையாட்டுத்துறையில் புதுப்பாய்ச்சல் – ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய தொழில்துறை திட்டங்கள் – கலைஞர் நூற்றாண்டு நூலகம் – கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை – கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என மூன்று ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கான சாதனைகளை செய்து வெற்றி நடைபோடுகிறது நம் தமிழ்நாடு அரசு.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் – ஒவ்வொரு மனிதரும் பயன்பெற வேண்டுமென்ற உயரிய லட்சியத்தோடு செயல்பட்டு வரும் நம், கழக அரசின் சாதனைகளை போற்றுவோம். நம் திராவிட மாடல் அரசு, இன்னும் பல உயரங்களை தொட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி, வரவிருக்கிற நாட்களில் இன்னும் அயராது உழைப்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மகளிர் உரிமைத் தொகையாக மாதம் ரூ.1000..விடியல் பேருந்து பயணம்; 4ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திராவிட மாடல் அரசு: அமைச்சர் உதயநிதி புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Dravitha ,Minister ,Udayanidhi ,Chennai ,Dravita model government ,Minister Assistant Minister ,Stalin ,India ,Chief Minister ,Mu. K. ,Udayanidhi Praise ,
× RELATED திராவிடநல் திருநாடு என்று பாடினால்...