சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே. சண்முகம் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் ஆகியோர் அரசு பங்களாக்களை வாடகைக்கு எடுத்தனர். இது குறித்து கடந்த ஆண்டு பிரதமரின் சகோதரரான லீ சியென் யாங் கருத்து கூறிய நிலையில் அவர் மீது இருவரும் அவதூறு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது. இரண்டு அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக லீ சியென் செலுத்த வேண்டிய நஷ்ட ஈடு குறித்து முடிவு செய்வதற்கான விசாரணை நேற்று நடந்தது. இதற்காக அமைச்சர்கள் சண்முகம் மற்றும் விவியன் பாலகிருஷ்ணன் வந்திருந்தனர். ஆனால் லீ ஆஜராகவில்லை.
The post சிங்கப்பூரில் வாடகை பங்களா விவகாரம் 2 இந்திய வம்சாவளி அமைச்சர்கள் விசாரணைக்கு ஆஜர் appeared first on Dinakaran.