டெல்லி : UGC-க்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் சாதிய பாகுபாடுகளை ஒழிப்பதற்காக UGC வெளியிட்ட புதிய விதிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. பொதுப் பிரிவினருக்கு எதிராக விதிகள் இருப்பதாக தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை, விசாரணைக்கு பட்டியலிட தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
