×

3,000 காளைகள்… 1800 காளையர்கள் மல்லுக்கட்டு; அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு: கார், டிராக்டர் பரிசு மழை அறிவிப்பு

அவனியாபுரம்: புகழ்பெற்ற அவனியாபுரத்தில் 3 ஆயிரம் காளைகளுடன் 1800 வீரர்கள் களம் காணும் ஜல்லிக்கட்டு நாளை நடைபெறுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த போட்டியை நாளை காலை 7 மணிக்கு அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைக்கிறார். மாவட்டநிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல், காளைகள் வெளியேறும் பகுதி மற்றும் பார்வையாளர்கள் அமருமிடம், காளைகள் மற்றும் வீரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்துமிடம் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. காளைகள் மற்றும் வீரர்களின் விவரங்கள் பதிவு ெசய்யப்பட்டு, ஆன்லைன் மூலம் டோக்கன் வழங்கப்பட உள்ளது.

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காளைகளும் 1,800க்கும் மேற்பட்ட வீரர்களும் களம் காண உள்ளனர். பாதுகாப்பு பணிகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட உள்ளனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் வீரர்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள், சுற்றுவாரியாக தெரிவிக்க எல்இடி திரை அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், தற்காலிக கழிப்பிட வசதி, திருப்பரங்குன்றம் சாலையில் இருபுறமும் பாதுகாப்புக்கான 8 அடி உயர இரண்டு அடுக்கு தடுப்பு வேலி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சிறந்த காளை மற்றும் வீரருக்கு டிராக்டர் மற்றும் கார் பரிசாக வழங்கப்படுகிறது.

இதனிடையே, நாளை மறுநாள் பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். வரும் 17ம்தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags : Mallukattu ,Jallikatu ,Avaniapuram ,Pongal festival ,Madurai Avenue ,Minister ,B. Murthy ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...