×

சொந்த ஊர்களுக்கு 16லட்சம் பேர் பயணம்; வெறிச்சோடிய சென்னை சாலைகள்; தமிழகம் முழுவதும் களை கட்டிய தைப் பொங்கல் கொண்டாட்டம்: கடைசி நேர விற்பனை; அலைமோதிய மக்கள் கூட்டம்

சென்னை: பொங்கல் பண்டிகையொட்டி பல லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பொங்கல் திருநாள் களைகட்டியுள்ளது. கடைசி நேர விற்பனையும் விறு விறுப்பாக நடந்து வருகிறது. பொங்கல் பண்டிகை தமிழர்களின் மிக முக்கியமான திருநாள். இது முதன்மையாக அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும் உழவர்களின் உழைப்புக்கும் நன்றி செலுத்தும் விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கும். எனவே சொந்த ஊரில் உரிய வேலை கிடைக்காத காரணத்தால் வெளியூருக்கு சென்று வேலை பார்க்கும் நிலையானது உள்ளது.
இதன் காரணமாக பண்டிகை கால விடுமுறை நாட்களில் மட்டுமே சொந்த ஊருக்கு செல்வார்கள்.

அதிலும் தொடர் விடுமுறை என்றால் ஒட்டுமொத்தமாக சொந்த ஊருக்கு சென்று விடுவார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை வருவதையொட்டி பல லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். அந்த வகையில் பொதுமக்கள் வெளியூர்களுக்கு செல்ல உதவிட சிறப்பு ரயில், சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அரசு பேருந்தில் மட்டும் கடந்த 4 நாட்களில் 6 லட்சத்து 90ஆயிரம் பேர் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள தகவலில், போக்குவரத்துத் துறையின் சார்பில், 2026ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் விவரமாக, நேற்று நள்ளிரவு நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 2,238 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 4,390 பேருந்துகள் இயக்கப்பட்டு 2,01940 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்த, 9ம்தேதி முதல் 13ம்தேதி நள்ளிரவு வரை, மொத்தம் 15,762 பேருந்துகள் இயக்கப்பட்டு 6,90,720 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இதுவரை 2,73,152 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோன்று, ரயில்​களி​லும் கடந்த வெள்​ளிக்​கிழமை முதல் பொது​மக்​கள் தங்​கள் சொந்த ஊர்​களுக்​குச் செல்ல தொடங்​கினர். குறிப்​பாக திங்​கள், செவ்​வாய்க்​கிழமை​களில் அதிக எண்​ணிக்​கை​யில் பயணி​கள் சென்​றனர். வழக்​க​மான விரைவு ரயில்​களில் டிக்​கெட் முன்​ப​திவு செய்ய முடி​யாதவர்​கள், சிறப்பு ரயில்​களில் முன்​ப​திவு செய்​து, சொந்த ஊருக்கு புறப்​பட்​டனர். முன்​ப​திவு டிக்​கெட் கிடைக்​காதவர்​கள் விரைவு ரயில்களில் பொதுப் பெட்​டிகளில் நெரிசலுடன் பயணம் மேற்​கொண்​டனர். அந்த வகை​யில், சென்​னை​யில் இருந்து பிற மாவட்​டங்​களுக்கு புறப்​பட்ட ரயில்​களும் நிரம்பி வழிந்​தன. நேற்று மட்​டும் ஒன்​றரை லட்​சம் பேர் பயணம் செய்​தனர். ஒட்​டுமொத்​த​மாக கடந்த 5 நாட்​களில் 5 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் ரயில்​களில் பயணம் செய்​துள்​ளனர்.

மேலும், ஆம்னி பேருந்​துகளில் 3 லட்​சம் பேரும், கார்​கள், இருசக்கர வாக​னங்​களில் ஆயிரக்​கணக்​கானோரும் சொந்த ஊர்​களுக்​குப் புறப்​பட்​டுச் சென்​றனர். பொங்​கலைக் கொண்​டாட கடந்த 5 நாட்​களில் அனைத்து வித​மான போக்​கு​வரத்து சேவை​கள் வாயி​லாக 16 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தங்​கள் சொந்த ஊர்​களுக்​குச் சென்​றுள்​ளனர். இவர்​கள் வரும் ஞா​யிற்​றுக்​கிழமை புறப்​பட்டு திங்​கட்​கிழமை காலை மீண்​டும் சென்னை திரும்​பும் வகை​யில் பேருந்​து, ரயில்​களில்​ டிக்கெட்​ முன்​ப​திவு செய்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது. ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் என்றாலும், வேறு வழியில்லாமல் பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் அதிக கட்டணத்தை செலுத்தி சென்றனர். ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது.

கூட்ட நெருக்கடியை பொருட்படுத்தாமல் பலர் சென்றனர். ஆம்னி பேருந்​துகளில் 3 லட்​சம் பேரும், கார்​கள், இருசக்கர வாக​னங்​களில் ஆயிரக்​கணக்​கானோரும் சொந்த ஊர்​களுக்​குப் புறப்​பட்​டுச் சென்​றனர். பொங்​கலைக் கொண்​டாட கடந்த 5 நாட்​களில் அனைத்து வித​மான போக்​கு​வரத்து சேவை​கள் வாயி​லாக சுமார் 16 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் தங்​கள் சொந்த ஊர்​களுக்​குச் சென்​றுள்​ளனர். இவர்​கள் வரும் ஞா​யிற்​றுக்​கிழமை புறப்​பட்டு திங்​கட்​கிழமை காலை மீண்​டும் சென்னை திரும்​பும் வகை​யில் பேருந்​து, ரயில்​களில்​ டிக்​கெட்​ முன்​ப​திவு செய்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.இதற்கிடையே நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை களை கட்டியது.

இதனால் சென்னையில் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. வட சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை எம்சி சாலையில் உள்ள துணிக் கடைகளில் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து, அவர்களின் விருப்பத்தை கேட்டு புத்தாடைகளை வாங்கிச் சென்றனர். வடசென்னையை ஒட்டிய திருவள்ளூர் மாவட்ட கிராமப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் மக்கள் வந்திருந்தனர். அப்பகுதியில் உள்ள சாலைகள் முழுவதும் மக்கள் கூட்டமாக காட்சியளித்தது.புரசைவாக்கம் நெடுஞ்சாலை, தானா தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று லேசான சாரல் மழை பெய்த நிலையிலும், மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போகி தினத்துக்கான மேளம், பொங்கலுக்காக பானை, கரும்பு போன்றவற்றை மக்கள் வாங்கிச் சென்றனர். ஜவுளிக் கடைகளில் புத்தாடைகள் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். நாளை பொங்கல் என்பதால் இன்றும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதேபோல், தி.நகர் உஸ்மான்சாலையில் பனகல் பூங்கா சந்தை, பாண்டிபஜார் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை முதலே பொதுமக்கள் குவிந்தனர். குறிப்பாக, தி.நகர் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இங்குள்ள பிரபல ஜவுளிக்கடைகளில் புதிய ஆடைகளும், வீட்டுக்கு தேவையான, வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்களையும் மக்கள் வாங்கி சென்றனர். பொதுமக்கள் கூட்டத்தில் எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக, போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.தாம்பரம் தினசரி மார்க்கெட்டில் கரும்பு, மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவை விற்பனை அமோகமாக நடைபெற்றது. இந்த ஆண்டு 15 எண்ணிக்கை கொண்ட கரும்பு கட்டு ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை செய்யப்பட்டது. மஞ்சள் ரூ.110 முதல் ரூ.150 வரைக்கும், வாழைத்தார் பெரிய ரகம் ரூ.600-க்கும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
மேலும், மண் பானை, விறகு அடுப்பு, கிழங்கு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. ஜவுளி கடைகளில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாகவும், 45 சதவீதம் அதிகமாகவும் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தாம்பரம் சானடோரியத்தில் உள்ள ஆட்டு சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் குரோம்பேட்டையில் உள்ள ஜவுளி மற்றும் நகை கடைகளுக்கு கூட்டம் அலை மோதியது. பொங்கல் விழாவை முன்னிட்டில், நேற்று சென்னை, புறநகரின் முக்கிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடை வீதிகள் அதிகம் இருக்கும் பல பகுதிகளில், நேற்று பகல் நேரங்களில் ஆட்டோ மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு போலீஸார் கயிறுகளை கட்டியும், தடுப்புகள் அமைத்தும் அமைத்தும் தடை விதித்தனர். காய்கறி கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

பெரும்பாலான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற நிலையில் சென்னையில் முக்கிய சாலைகள் அனைத்தும் இன்று வெறிச்சோடி காணப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், வணிக நிறுவனங்களில் பொங்கல் விழா இன்று முதல் களை கட்டி வருகிறது. நாளை அனைத்து வீடுகளிலும் பொங்கலிட்டு வெகு விமரிசையாக பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு பொங்கல் விற்பனை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : Chennai ,Pongal ,Tamil Nadu ,Pongal festival ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பானை, கோலப்பொடி விற்பனை விறுவிறுப்பு