சென்னை: ஒசூரில் ரூ.300 கோடியில் டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகளை மேற்கொள்ள அரசு டெண்டர் கோரியுள்ளது. 2025 – 26 பட்ஜெட்டில் உயர்தர அலுவலக வசதிகளுடன் ஒசூரில் டைடல் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிப்பின்படி டைடல் பூங்கா கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. அந்திவாடி மைதானத்தின் அருகில் 9.2 ஏக்கர் நிலத்தில் 5.50 லட்சம் சதுர அடி பரப்பளவில் டைடல் பூங்கா அமைய உள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு பணி ஆணை வழங்கிய நாளிலிருந்து 2 ஆண்டுக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
