- செயலாளர் நாயகம்
- இணையம்
- விவகாரங்களில்
- அத் முகா-பாஜக கூட்டணி
- திணாகரன்
- சென்னை
- பொது செயலாளர்
- இணைய விவகாரங்கள்
- ஆடமுகா - பாஜபி
- தி.V.V தினகரன்
- தினகரன்
- அட்டாமுக-பாஜக கூட்டணி
- அமித் ஷா
- தில்லி
- பாஜக
- டிடீவி
சென்னை: அதிமுக-பாஜக கூட்டணியில் இணைய அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தயக்கம் காட்டி வருகிறார். அதிமுக-பாஜக கூட்டணியில் இணையும்படி தினகரனுக்கு பாஜக மேலிடம் அழுத்தம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மேலிட அழுத்தத்தால் டெல்லி சென்று அமித் ஷாவை டிடிவி தினகரன் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்தார். எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று திரும்பிய மறுநாளே அமித் ஷா -தினகரன் சந்திப்பு நடந்துள்ளது. தினகரனை கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவிடம் ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அமமுக கூட்டணியில் இணைந்தால் அக்கட்சிக்கு 8 முதல் 12 தொகுதிகள் வரை ஒதுக்கவும் திட்டமிட்டுள்ளனர். பாஜக அழுத்தம் காரணமாக அதிமுக கூட்டணியில் இணைய தினகரனும் அமித் ஷாவிடம் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து வந்த நிலையில் அவரது தலைமையிலான கூட்டணியில் சேர டிடிவி தினகரன் தயக்கம் காட்டி வருகிறார். அதிமுக கூட்டணியில் இணையும் முடிவை கட்சித் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்றும் தினகரன் தயக்கம் காட்டி வருகிறார்.
துரோகத்துக்கு நோபல் பரிசு என்றால் அது எடப்பாடிக்குதான் தர வேண்டும் என்று டிடிவி தினகரன் பேசியிருந்தார். யார் உள்ளடி வேலை செய்து நம்மை தோற்கடிப்பார்கள் என்று எனக்குத் தெரியும் என தஞ்சை பொதுக்குழுவில் டிடிவி பேசினார். துரோகத்தை வீழ்த்துவதுதான் முதல் வேலை என்று பேசி வந்த தினகரன் தற்போது தடுமாற்றத்தில் உள்ளார். அதிமுக கூட்டணியில் இணைந்தாலும் உள்ளடி வேலை மூலம் தங்களது வேட்பாளர்கள் தோற்கடிக்கப்படலாம் என டிடிவி சந்தேகம் அடைந்துள்ளார். குழப்பம் காரணமாக கடந்த 3 நாட்களாக எந்த ஒரு கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் டிடிவி தினகரன் இருக்கிறார்.
