- தமிழ்நாடு அரசு
- செர்வோ
- அமைச்சர்
- ஈ. ஆர். பி.
- சென்னை
- ஸர்வொம்
- டி. ஆர். பி.
- சென்னை பொதுச் செயலகம்
- தொழிற்துறை அமைச்சர்
- டி.ஆர்.பி ராஜா
சென்னை: சர்வோம் ஏஐ நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா; உலகமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை நோக்கி செல்கிறது. ரூ.10,000 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு உயிர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது ஒரு செயற்கை நுண்ணறிவு பூங்கா அல்லது கிராமம் போன்று உருவாகும். ஏ.ஐ. பூங்கா மூலம் உயர் தொழில்நுட்ப தரவு மையங்கள் கிடைக்கும். திட்டத்திற்காக பெரிய தரவு மையம் அமைக்கப்பட உள்ளது; அரசு துறைகளின் எல்லா தரவுகளும் அதில் இருக்கும். சென்னை ஐஐடிக்கு அருகில் தரவு மையத்தை அமைக்க நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. ரூ.10,000 கோடி முதலீட்டில் பெரும்பகுதி தரவு மையம், ஆராய்ச்சிக்கு செலவழிக்கப்படும். திட்டத்தின் மூலம் உயர் தொழில்நுட்பத் தரவு மையங்கள் கிடைக்கும்.
தமிழ்நாடு முன்னோடி என்பதால் இந்த முதலீட்டின் மூலம் ஏஐ துறையில் மேலும் புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் துவங்கப்படும். ஏஐ தொழில்நுட்பத் துறையில் இது மிகப்பெரிய வளர்ச்சியை அளிக்கும். நம் ஊரில் ஆராய்ச்சி செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட ஏஐ தொழில்நுட்பம்தான் இது என்று கூறினார்.
