×

வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி துணிகரம்; சிபிஐ முன்னாள் இணை இயக்குனரின் மனைவியிடம் ரூ.2.58 கோடி மோசடி: குற்றவாளிகளுக்கு வலை

திருமலை; சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் மனைவியின் வாட்ஸ்அப்பிற்கு பங்கு சந்தையில் முதலீடு செய்தால் 500 சதவீதம் லாபம் கிடைக்கும் எனக்கூறி ரூ.2.58 கோடியை சைபர் மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது. ஆந்திர மாநில சிபிஐ முன்னாள் இணை இயக்குநர் லட்சுமிநாராயணா. இவரது மனைவி ஊர்மிளா. இவரு வாட்ஸ்அப் எண்ணுக்கு ஒரு லிங்க் வந்தது. அதில் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் 500 சதவீதம் லாபம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை உண்மை என நம்பிய ஊர்மிளா 19 தவணைகளில் மொத்தம் ரூ.2.58 கோடியை முதலீடு செய்துள்ளார். இதற்காக ஊர்மிளா தன்னிடம் இருந்த நகை, மற்றும் கணவரிடம் இருந்த தங்க நகைகளை அடமானம் வைத்துள்ளார். மேலும் கடன் வாங்கியும் முதலீடு செய்தாராம். ஆனால் முதலீடு செய்த பணத்திற்குரிய லாபம் வரவில்லை. இதனால் சம்பந்தப்பட்ட லிங்க்கில் தொடர்பு கொண்டபோது சரியான பதில் அளிக்கவில்லையாம். தொடர்ந்து பேச முயன்றபோது மர்ம நபரின் செல்போன் சுவிட்ச் ஆப் என வந்துள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஐதராபாத் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மோசடி ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தி அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் மனைவியையே சைபர் மோசடி கும்பல் ஏமாற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை நடத்தியவர் சிபிஐ முன்னாள் இணை இயக்குநர் லட்சுமிநாராயணா. இவரது விசாரணை அறிக்கையின் அடிப்படையில் ஜெகன்மோகன் ரெட்டி 16 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : WhatsApp ,CBI ,Tirumalai ,Andhra ,Pradesh Lakshminarayana ,
× RELATED மருமகனுடன் கள்ளக்காதலுக்கு இடையூறு...