×

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக விஜயிடம் சிபிஐ விசாரணை தொடங்கியது

கரூர்: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக விஜயிடம் சிபிஐ விசாரணை தொடங்கியது. விசாரணைக்கு ஆஜரகா சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றார்.

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி அன்று கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை உச்சநீதிமன்றம் மேற்பார்வையில் சிபிஐ விசாரித்து வருகிறது. கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சி.பி.ஐ. அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். அங்கு வைத்து புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார், ஆதவ் அர்ஜூனா, மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் கடந்த நவம்பர் மாதம் விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சம்மன் அனுப்பி டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்திலும் டிசம்பர் 29, 30, 31, ஆகிய தேதிகளில் தவெக முக்கிய நிர்வாகிகள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமாரிடம் விசாரணை நடந்தது.

கரூர் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் விஜய்யின் பெயர் இல்லை. எனினும் அவரிடமும் விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்து, த.வெ.க. தலைவர் விஜயை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர்.

Tags : CBI ,Vijay ,Karur ,Azaraka ,Delhi ,Chennai ,K. ,
× RELATED ஜனநாயகன் திரைப்படம் தொடர்பான...