- திருமாஷாசை-திருவள்ளூர் நெடுஞ்சாலை
- திருவள்ளூர்
- வால்வேடு காவல்துறை
- திருமசிசை
- திருவள்ளூர் நெடுஞ்சாலை
- திருமசாச பெருநகர பகுதி
- பூந்தமல்லி
திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த திருமழிசை பேரூராட்சி பகுதியில் திருமழிசை – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் வெள்ளவேடு காவல் சோதனைச் சாவடி உட்பட பல இடங்களில் உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உயர்கோபுர மின்விளக்குகள் பகலிலும் அணைக்காததால் எரிந்துக் கொண்டே இருக்கின்றன. இதனால் மின்சாரம் விரயம் ஆவதுடன் மக்களின் வரிப்பணம் வீணாகி வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பகல் நேரத்தில் உயர்கோபுர மின்விளக்குகள் எரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறுகின்றனர்.
இதுகுறித்து மின்வாரிய உதவி பொறியாளர் ஒருவர் கூறும்போது, ‘’தேசிய நெடுஞ்சாலை பகுதியில்உயர்கோபுர மின்விளக்கு அமைப்பது மட்டும்தான் எங்கள் பணி. அந்த விளக்குகளை பராமரிப்பு பணிகளை சம்பந்தப்பட்ட நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகம்தான் மேற்கொள்ளவேண்டும். எனவே, மாலை 6 மணிக்கு எரிய வைப்பதும் காலை 6 மணிக்கு அணைய வைப்பதும் என ஆட்டோமெட்டிக் சுவிட்ச் அமைக்க வேண்டும்’ என்றார்.
